ChatGPT Go: பிரீமியம் சேவை இந்தியாவில் முற்றிலும் இலவசம் - ஓபன் ஏஐ அதிரடி அறிவிப்பு
- அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருக்கும் OpenAI, இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவின் அதன் மேம்பட்ட பிரீமியம் சந்தா திட்டமான 'ChatGPT Go' ஐ ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 4 முதல் தொடங்கும் சிறப்பு விளம்பர காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ChatGPT Go என்றால் என்ன?
ChatGPT Go என்பது சமீபத்தில் OpenAI ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டமாகும். இதன் மூலம், ChatGPT இன் அதிநவீன GPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளைப் பெறலாம்.
இதில் அதிக செய்தி அனுப்பும் வரம்பு, சிறந்த பட உருவாக்கம், அதிக கோப்புகள் மற்றும் படங்களை பதிவேற்றும் வசதி மற்றும் உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த சாந்தா திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 முதல் இது இலவசமாக வழங்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.