அறிந்து கொள்ளுங்கள்

டிசிஎஸ் உடன் இணைந்து 4ஜி சேவை வெளியிடும் பிஎஸ்என்எல்

Published On 2023-02-15 12:25 IST   |   Update On 2023-02-15 12:25:00 IST
  • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
  • 4ஜி சேவைகளை வெளியிட டிசிஎஸ் உடன் இணைந்து உள்நாட்டு உபகரணங்களை பிஎஸ்என்எல் பயன்படுத்த இருக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் இணைந்து நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎஸ் உபரணங்களை பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இரு நிறுவனங்கள் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்த இருக்கிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை. தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டுக்கு மேலும் சில காலம் ஆகும்.

டிசிஎஸ் உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கொள்முதல் ஆணை வழங்குவதற்கு மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பிஎஸ்என்எல் நிர்வாக குழுவின் முடிவு குறித்து மத்திய தொலைதொடர்பு துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மத்திய டெலிகாம் துறை சார்பில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை மார்ச் மாத வாக்கில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் வழங்க இருக்கிறது. இதற்கான மொத்த தொகை ரூ. 24 ஆயிரத்து 556.37 கோடி ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகளை பத்து ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும். இதற்காக டிசிஎல் சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை வழங்குகிறது. இதில் சில மூன்றாம் தரப்பு பொருட்களும் இடம்பெற்று இருக்கும். 

Tags:    

Similar News