அறிந்து கொள்ளுங்கள்

75 ஜிபி டேட்டா வழங்கும் புது பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

Update: 2022-08-05 07:00 GMT
  • பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
  • இந்த சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஆயத்தமாகி உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புது சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

புதிய பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த போதும் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைந்து விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.

இதுதவிர ரூ. 2 ஆயிரத்து 022 விலை பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.


மற்ற சலுகைகள்:

புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 022 விலை சலுகை மட்டும் இன்றி நீண்ட வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது.

மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News