அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட் வெளியீடு தாமதம் ஆவது ஏன்?

Published On 2022-06-08 12:40 IST   |   Update On 2022-06-08 12:40:00 IST
  • மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாம்.
  • மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் அதன் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அண்மையில் நடைபெற்ற WWDC 2022 ஈவண்ட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் அதில் வெளியிடவில்லை. அதன் வெளியீடு தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி, ஆப்பிள் நிறுவனம் அந்த ஹெட்செட்டை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை சீனாவை சேர்ந்த ஆய்வாளரான மிங் சி கு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாகவும், அதன் முன்பதிவு அடுத்தாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு நடைபெறும் WWDC எனும் டெவலப்பர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே இந்த ஹெட்செட் விற்பனைக்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பில் சில சிக்கல்களை சந்தித்ததன் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் விலை 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News