அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 19 ஆயிரம் தள்ளுபடி.. மேக்புக் ஏர் வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்..

Published On 2023-11-28 09:28 GMT   |   Update On 2023-11-28 09:28 GMT
  • அமேசான் வலைதளத்தில் லேப்டாப் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
  • மேக்புக் ஏர் M1 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆண்டில் மேக்புக் ஏர் M1 மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 99 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு தற்போது அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அமேசான் வலைதளத்தில் இந்த லேப்டாப் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

அமேசான் வலைதள விவரங்களின் படி ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மேக்புக் ஏர் M1 விலை ரூ. 99 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 990 என்று மாறி விடும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி முழு தொகை செலுத்தி வாங்குவோருக்கும், மாத தவணையில் வாங்குவோருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை சேர்க்கும் போது மேக்புக் ஏர் M1 விலை ரூ. 79 ஆயிரத்து 990 என்று மாறிவிடும். மேக்புக் ஏர் M1 மாடல் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மேக்புக் ஏர் M1 அம்சங்கள்:

13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளே, 400 நிட்ஸ் பிரைட்னஸ்

M1 சிப்செட்

8 ஜி.பி. ரேம்

256 ஜி.பி. மெமரி

தண்டர்போல்ட் 3

யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1, டிஸ்ப்ளே போர்ட்

3.5mm ஹெட்போன் ஜாக்

பேக்லிட் மேஜிக் கீபோர்டு

டச் ஐடி சென்சார்

வைபை, ப்ளூடூத், ஹெச்.டி. கேமரா

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

15 மணி நேர பேக்கப்

30 வாட் யு.எஸ்.பி. சி பவர் அடாப்டர்

Tags:    

Similar News