அறிந்து கொள்ளுங்கள்

பயனர்களுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் - உடனே பெறுவது எப்படி?

Update: 2022-09-23 07:18 GMT
  • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
  • ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் விரைவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்.

ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பயனர்கள் ரிவார்டுகளை பெறுவது, மின் கட்டணம் செலுத்துவது, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியை இயக்குவது, மொபைல் ரிசார்ஜ் என ஏராளமான சேவைகளை பெறலாம். குறிப்பாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 5 ஜிபி டேட்டா 1 ஜிபி வீதம் ஐந்து வவுச்சர்களாக வழங்கப்பட உள்ளன.

பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய பிரீபெயிட் பயனர்களுக்கு 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதற்கு பயனர்கள் புதிதாக ஏர்டெல் இணைப்பை பெற வேண்டும். அதன் பின் ஏர்டெல் தேங்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்து ஏர்டெல் மொபைல் நம்பர் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். பின் செயலியின் மை கூப்பன்ஸ் பகுதியில் 5 ஜிபி டேட்டா வழங்கும் வவுச்சர்கள் மூலம் இலவச டேட்டாவை பெறலாம்.

புதிதாக ஏர்டெல் சேவையில் இணையும் பிரீபெயிட் பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ததும் இலவச டேட்டா வழங்கப்பட்டு விடும். இந்த இலவச டேட்டா ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும். ஒவ்வொரு வவுச்சரிலும் 1 ஜிபி டேட்டா வழங்கும். இந்த வவுச்சர்களை 90 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமின்றி வெற்றிகரமாக மற்றவர்களையும் ஏர்டெல் சேவையில் இணைய வைக்கும் பட்சத்தில் ரூ. 100 வரை பெற முடியும். ஏர்டெல் தேங்ஸ் செயலியில் ஏர்டெல் பிரீபெயிட் சிம்-ஐ நண்பருக்கு பரிந்துரை செய்யும் இணைய முகவரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்டெல் சிம் வாங்க நண்பர் நீங்கள் அனுப்பிய இணைய முகவரியை பயன்படுத்தினால், ரூ. 100 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.

Tags:    

Similar News