அறிந்து கொள்ளுங்கள்

பிரீபெயிட் சலுகை விலையை திடீரென உயர்த்திய ஏர்டெல்

Update: 2023-01-24 15:31 GMT
  • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
  • விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.

"சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News