- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.