தொழில்நுட்பம்
ட்விட்டர் ஃபிளீட்ஸ்

24 மணி நேரத்தில் தானாக மறையும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ட்விட்டர்

Published On 2020-03-05 11:44 GMT   |   Update On 2020-03-05 11:44 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் பதிவிட்ட ட்விட்கள் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து போக செய்யும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.



ஸ்னாப்சாட் தளத்தின் 24 மணி நேரத்தில் தரவுகளை தானாக மறைய செய்யும் அம்சத்தை வழங்கும் புதிய சமூக வலைதளமாக ட்விட்டர் உருவாகி இருக்கிறது. ஃபிளீட்ஸ் என அழைக்கப்படும் புதிய அம்சம் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது.

வழக்கமான ட்வீட்களை போன்று இல்லாமல், பயனர்கள் ஃபிளீட்ஸ் ட்விட்களை ரீட்வீட், லைக் அல்லது கமென்ட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. ட்விட்களின் வழக்கமான போக்கு பெரும்பாலான ட்விட்டர் வாடிக்கையாளர்கள் அசவுகரியமாக உணர்வதாக ட்விட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற சூழல் காரணமாக பலர் தங்களது அன்றாட கருத்துக்களை பதிவிடும் முன் பதற்றம் கொள்வதாக கூறப்படுகிறது. 



ஃபிளீட்ஸ் அம்சம் பொதுவெளியில் இருக்கும் என்பதால், இதனை பதிவிட்ட 24 மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். எனினும், ஃபிளீட்ஸ் ரக ட்விட்களை ட்விட்டர் சர்ச், மொமன்ட்ஸ் அல்லது வெளிப்புற வலைதளங்களில் எம்பெட் செய்வதற்கான வசதியை நீக்கிவிடுகிறது.

முதற்கட்டமாக ட்விட்டர் ஃபிளீட்ஸ் அம்சம் பிரேசில் நாட்டில் உள்ள ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் இந்த அம்சத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்த அம்சத்தினை மற்ற நாடுகளில் வழங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News