மொபைல்ஸ்

சாம்சங் Black Friday விற்பனை அறிவிப்பு - ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள்!

Update: 2022-11-23 04:12 GMT
  • சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனையை நடத்துகிறது.
  • சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர் என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சாம்சங் இந்தியா நிறுவனம் "Black Friday" சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்குகிறது. சாம்சங் Black Friday விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, மாணிட்டர், குளிர்சாதன பெட்டி என ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

சலுகைகளை முழுமையாக அறிவிக்கும் முன் அவற்றின் டீசரை சாம்சங் வெளியிட்டு உள்ளது. அதன்படி கேலக்ஸி Z ஃபோல்டு 4, கேலக்ஸி Z ஃப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் Black Friday சலுகை விவரங்கள்:

சாம்சங் நடத்தும் சிறப்பு Black Friday சலுகைகள் நவம்பர் 24 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் கேலக்ஸி S22 சீரிஸ் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே போன்று கேலக்ஸி Z ஃபோல்டு 4, Z ஃப்ளிப் 3 மாடல்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலின் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும்.

கேலக்ஸி S21 FE மாடல் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும். மேலும் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட இருக்கிறது. சாம்சங் கடைசியாக அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களின் விலையும் குறைக்கப்பட இருக்கிறது. இத்துடன் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ விலையும் குறைகிறது.

இவைதவிர கேலக்ஸி A சீரிஸ் மற்றும் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லேப்டாப், மாணிட்டர், அக்சஸரீக்கள், டிவி, சவுண்ட் பார், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி, டேப்லெட், ஏசி மற்றும் சமையலறை சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

Tags:    

Similar News