மொபைல்ஸ்

ஸ்மார்ட்போனுக்கு ரூ. 20,000 வரை சலுகை - சாம்சங் அதிரடி

Published On 2025-05-16 12:38 IST   |   Update On 2025-05-16 12:38:00 IST
  • இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும்.
  • செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.

இந்தியாவில் தற்போது சாம்சங் கேலக்ஸி S25-ஐ ரூ.63,999 என்ற விலையில் வாங்கலாம். வழக்கமான விற்பனை விலையை விட குறைந்த விலையில் இந்த மொபைலை வாங்குபவர்கள் பயன்படுத்தக்கூடிய பல சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் நேரடியாக வாங்கும்போது ரூ.10,000 வங்கி கேஷ்பேக்கைப் பெறலாம். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி S25-க்கு தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ள விரும்புவோருக்கு ரூ.10,000 அப்கிரேடு போனஸும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 விலை 12 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.74,999 இல் தொடங்குகிறது. இருப்பினும், சாம்சங் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.11,000 அப்கிரேடு போனஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் விலை ரூ.63,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை 12 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதி பரிமாற்றத் தொகை உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் தயாரிப்பு, மாடல் மற்றும் நிலை மற்றும் உங்கள் பகுதி உள்ளிட்டவைகளை பொறுத்து மாறுபடும்.

வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்ய விரும்பவில்லை என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள வங்கி கேஷ்பேக்கைப் பெறும் ஆப்ஷன் உள்ளது. கூடுதலாக, சாம்சங் சார்பில் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை மற்றும் ரூ. 8,000 வங்கி கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும். இதற்கிடையில், NBFC வாடிக்கையாளர்கள் 24 மாத வட்டியில்லா மாத தவணை திட்டத்துடன் சாம்சங் கேலக்ஸி S25 மாடலையும் வாங்கலாம்.



இந்த சலுகைகள் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக ஸ்மார்ட்போனை வாங்கினால் செல்லுபடியாகும் என்று சாம்சங் கூறுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ + நானோ), ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன்யுஐ 7 இல் இயங்குகிறது. இது 6.2-இன்ச் Full HD+ (1,080×2,340 பிக்சல்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க சாம்சங் கேலக்ஸி S25 மூன்று கேமரா சென்சார்களை பெறுகிறது. இதில் 2x இன்-சென்சார் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், OIS மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது 25W (வயர்டு) இல் சார்ஜ் செய்யக்கூடிய 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0 (15W) மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுக்காக வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News