மொபைல்ஸ்

சாம்சங்கின் மிக மெல்லிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-05-14 10:53 IST   |   Update On 2025-05-14 10:53:00 IST
  • கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
  • ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் வெளியிடப்பட்டது. இந்த புதிய போனின் இந்திய விலை விவரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேலக்ஸி S25 எட்ஜ், கேலக்ஸி சிப்செட்டிற்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட், 200MP கேமரா யூனிட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

5.8 மிமீ அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இதுவரை இருந்த மிக மெல்லிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இது 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் 12ஜிபி + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 1,09,999-ல் தொடங்குகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ. 1,21,999 ஆகும். இந்த மொபைல் தற்போது சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கேலக்ஸி S25 எட்ஜ் 512ஜிபி வேரியண்ட்-ஐ 256ஜிபி மாடலின் விலையிலேயே வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி + 1440x3120 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 பாதுகாப்புடன் கொண்டுள்ளது. இது கேலக்ஸி SoC-க்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 உடன் கிடைக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 2x ஆப்டிகல் இன்-சென்சார் ஜூம் மற்றும் OIS வசதி கொண்ட 200MP பிரைமரி கேமரா, பின்புறம் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறம் பஞ்ச்-ஹோல் ஸ்லாட்டில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 12MP சென்சார் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் ஆனது 25W வயர்டு மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3,900mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். இது IP68 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

Tags:    

Similar News