மொபைல்ஸ்

ஃபிளாக்ஷிப் அம்சங்களுடன் 144Hz டிஸ்ப்ளே - இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S24 சீரிஸ் விவரங்கள்!

Published On 2023-04-01 08:23 GMT   |   Update On 2023-04-01 08:23 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S24 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.
  • புதிய கேலக்ஸி S24 சீரிஸ் 144Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.

சாம்சங் நிறுவனத்தின் 2023 ஃபிளாக்ஷிப் சீரிஸ் - கேலக்ஸி S23 தலைசிறந்த அம்சங்களால் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தையில் கிடைக்கும் அதிநவீன ஹார்டுவேர் கொண்டு உருவாக்கப்படு இருந்த கேலக்ஸி S23 சீரிஸ் இந்த பிரிவில் பிரபல மாடலாக உள்ளது. இந்த நிலையில், சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர், அதிவேகமான ஸ்டோரேஜ் மற்றும் 144Hz டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. 2024 வாக்கில் சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி S24 சீரிஸ், இந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

 

அந்த வகையில், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம். இந்த பிராசஸர் SM8650 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை விட அதிக செயல்திறன் மற்றும் கூடுதல் அம்சங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கும்.

144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே பேனல் அதிவேக கேமிங் அனுபவம், நேர்த்தியான யுஐ மற்றும் அதிவேக லோட் நேரம் என ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனுபவத்தை கேலக்ஸி S24 சீரிஸ் மாற்றியமைக்கும். புதிய கேலக்ஸி S24 சீரிசில் UFS 4.1 ஸ்டோரேஞ்ச் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க புதிய 200MP பிரைமரி கேமரா, கூடுதல் சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி S23 சீரிசில் இருந்ததை விட கேலக்ஸி S24 சீரிசில் அதிகளவு ஜூமிங் வசதி வழங்கப்படலாம்.

Tags:    

Similar News