மொபைல்ஸ்

சாம்சங் சூப்பர் சர்ப்ரைஸ்.. புதிய நிறங்களில் அறிமுகமான கேலக்ஸி S23 அல்ட்ரா!

Published On 2023-06-22 07:59 IST   |   Update On 2023-06-22 07:59:00 IST
  • சாம்சங் கேல்கஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போது நான்கு நிறங்ளில் கிடைக்கிறது.
  • கேலக்ஸி S23 அல்ட்ரா புதிய நிற வேரியண்ட்கள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிளாக்ஷிப் மாடல் முதன் முதலில் ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் நிற ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் ரெட் மற்றும் லைட் புளூ என இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய நிற வேரியண்ட்களின் விலையும் அதன் மற்ற நிறங்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் புதிய லைட் புளூ மற்றும் ரெட் நிற வேரியண்ட்கள் சாம்சங் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஸ்டோர்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஃபேன்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா அம்சங்கள்:

6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே

120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

அட்ரினோ GPU

அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

அதிகபட்சம் 1 டிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1

IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

200MP பிரைமரி கேமரா

12MP அல்ட்ரா வைடு கேமரா

10MP டெலிபோட்டோ லென்ஸ்

10MP டெலிபோட்டோ லென்ஸ்

12MP செல்ஃபி கேமரா

5000 எம்ஏஹெச் பேட்டரி

45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி போர்ட்

Tags:    

Similar News