மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள்

Update: 2023-01-28 08:19 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன.
  • புதிய கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு துவங்கும் முன், மைஸ்மார்ட்பிரைஸ் மற்றும் டிப்ஸ்டர் யோகேஷ் ரார் இணைந்து புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை விவரங்களை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள் லீக் ஆன நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் விலையும் முந்தைய தகவல்களில் உள்ளதை போன்றே குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி புதிய கேலக்ஸி S23 விலை கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி S22 விலையை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

லீக் ஆன விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி S23 பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். இது ஐபோன் 14 இந்திய விலையை விட ரூ. 99 அதிகம் ஆகும். கேலக்ஸி S23 பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றும், கேலக்ஸி S22 பிளஸ் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S22 அல்ட்ரா விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இந்த முறை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் பிரத்யேகமாக கான்ஃபிகர் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 6.8 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

Tags:    

Similar News