மொபைல்ஸ்

இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலையை திடீரென குறைத்த சாம்சங்

Published On 2023-06-11 09:45 IST   |   Update On 2023-06-11 09:45:00 IST
  • இந்திய சந்தையில் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்கள், ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் இந்திய விலையை குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி S22 விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் போரா பர்பில், கிரீன், ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் பின்க் கோல்டு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

விலை குறைப்பு விவரங்கள்:

விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் விலை தற்போது ரூ. 64 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 54 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதன் விற்பனை அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S22 அம்சங்கள்:

6.1 இன்ச் full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.1, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News