மொபைல்ஸ்

ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பை அறிவித்த சாம்சங் - எவ்வளவு தெரியுமா?

Update: 2022-08-04 06:53 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 2 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 48MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

புதிய விலை விவரம்:

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17 ஆயிரத்து 999

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19 ஆயிரத்து 999


மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான சமயத்தில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கிரே, மிண்ட் மற்றும் வைலட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A22 5ஜி அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 48MP பிரைமரி கேமரா

- 5MP அல்ட்ரா வைடு கேமரா

- 2MP டெப்த் சென்சார்

- 8MP செல்பி கேமரா

- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்

- யுஎஸ்பி டைப் சி போர்ட்

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

- 5000 எம்ஏஹெச் பேட்டரி

- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

Tags:    

Similar News