மொபைல்ஸ்

சம்பவத்துக்கு தயாரான சியோமி.. விலையே இவ்வளவு தானா- என்ன மாடல் தெரியுமா?

Published On 2023-11-09 12:52 GMT   |   Update On 2023-11-09 12:52 GMT
  • புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
  • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News