மொபைல்ஸ்

மிக குறைந்த விலையில் 5ஜி போன் உருவாக்கும் ரியல்மி - விரைவில் வெளியீடு!

Published On 2022-08-02 04:16 GMT   |   Update On 2022-08-02 04:16 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் புது பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது.

இந்திய சந்தையில் எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதன் படி இந்தியாவில் குறைந்தபட்சம் நான்கு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும் நுகர்வோருக்காக புது பிரிவுகளில் களமிறங்கவும் ரியல்மி முடிவு செய்துள்ளது.

ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த வகையில், ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் புதிய தலைமுறை கனெக்டிவிட்டி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இதை பயனர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் குறைந்த விலை சாதனங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இது தவிர ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 10 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது பண்டிகை காலத்தை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நுகர்வோர் சாதனங்கள் சார்ந்து புதிதாக இரண்டு அல்லது மூன்று பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமீபத்தில் தான் ரியல்மி நிறுவனம் தனது முதலவ் மாணிட்டரை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாணிட்டர் ரியல்மி ஃபிளாட் மாணிட்டர் FHD என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News