மொபைல்ஸ்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு.. உடனே ஆர்டர் போடலாம் போலயே..

Published On 2024-02-19 09:07 GMT   |   Update On 2024-02-19 09:07 GMT
  • இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 108MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் தற்போது நிரந்தர விலை குறைப்பை பெற்று இருக்கிறது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 21 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 19 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போனினை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

 


அம்சங்களை பொருத்தவரை நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போனில் 6.73 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, அதிகபட்சம் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ். கொண்டிருக்கும் நார்டு CE 3 லைட் மாடலுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News