மொபைல்ஸ்
null

ஒன்பிளஸ் 11R இந்திய உற்பத்தி துவக்கம் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-01-16 04:09 GMT   |   Update On 2023-01-16 04:12 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி விட்டன.
  • புதிய ஒன்பிளஸ் 11R இந்திய உற்பத்தி துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய தகவல்கள் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா மற்றும் 91மொபைல்ஸ் மூலம் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி மாத வாக்கில் ஒன்பிளஸ் 11 சர்வதேச வெளியீடு நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து அறிமுகமாகும் இரண்டாவது ஒன்பிளஸ் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 11R இருக்கும்.

புதிய ஒன்பிளஸ் 11R எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா வலைதளம் மூலம் வெளியாகி விட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 11R இந்திய உற்பத்தி துவங்கி விட்டது. இதற்கான வெளியீட்டை ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் நடத்த ஒன்பிளஸ் திட்டமிட்டு வருகிறது.

அடுத்த சில வாரங்களில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒன்பிளஸ் 11R பெயர் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

எனினும், சரியான வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவல்களும் இல்லை. மேலும் பெயர் தவிர வேறு எந்த தகவலும் வலைதளத்தில் இடம்பெறவில்லை. ஏற்கனவே ஒன்பிளஸ் 11R டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

ஒன்பிளஸ் 11R எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 2772x1240 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது லென்ஸ், 2MP டெரிடரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம். இது மட்டுமின்றி புது ஒன்பிளஸ் 11R மாடலில் அலெர்ட் ஸ்லைடர், ஐஆர் பிலாஸ்டர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களில் மூன்று கேமரா செட்டப், அலெர்ட் ஸ்லைடர் மற்றும் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

Photo Courtesy: @OnLeaks | @HeyitsYogesh

Tags:    

Similar News