மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-06-03 06:17 GMT   |   Update On 2023-06-03 06:17 GMT
  • மோட்டோரலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 3800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
  • புதிய ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

சீனா மற்றும் சர்வதேச சந்தைகளை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மோட்டோரோலா 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 6.9 இன்ச் FHD+ LTPO pOLED ஸ்கிரீன், 1-165Hz ரிப்ரெஷ் ரேட், 3.6 இன்ச் FHD+ வெளிப்புறம் pOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்புறம் என இருபுறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது இன்ஃபனைட் பிளாக் மற்றும் கிளேசியர் புளூ வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மோட்டோரலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 3800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. விற்பனை முதற்கட்டமாக சீன சந்தையில் ஜூன் 5-ம் தேதியும், ஜூன் 23-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனைக்கு வருகிறது. 

Tags:    

Similar News