மொபைல்ஸ்

5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ e13 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2023-02-09 08:06 GMT   |   Update On 2023-02-09 08:06 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய e சீரிஸ் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
  • ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் புதிய மோட்டோ e13 ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ e13 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் T606 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒஎஸ், ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் மோட்டோ e13 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ e13 அம்சங்கள்:

6.5 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்

ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

2 ஜிபி, 4 ஜிபி ரேம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்)

டூயல் சிம் ஸ்லாட்

13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

5MP செல்ஃபி கேமரா

3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேடடரி

10 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மோட்டோ e13 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் கிரீமி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டோ e13 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் பிப்ரவரி 15 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News