மொபைல்ஸ்

OLED டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் SE 4

Published On 2023-03-07 06:18 GMT   |   Update On 2023-03-07 06:18 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
  • புதிய ஐபோன் SE 4 மாடலில் OLED ஸ்கிரீன், 5ஜி சிப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 4 மாடலை ரத்து செய்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆப்பிளின் சொந்த 5ஜி சிப் சார்ந்த பிரச்சினை காரணமாக ஐபோன் SE 4 ரத்தாகி இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஆய்வாளர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் OLED டிஸ்ப்ளே மற்றும் பிரத்யேக 5ஜி சிப் கொண்ட 6.1 இன்ச் ஐபோன் SE மாடல் உருவாக்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்.

கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், புதிய ஐபோன் SE மாடல் சீனாவின் BOE உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் விற்பனை செய்து வரும் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளேக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 ஐபோன் மாடல்களுக்கு BOE நிறுவனம் OLED பேனல்களை வினியோகம் செய்யும் என கூறப்பட்டது.

 

ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்பட இருக்கும் LTPS OLED 6.1 இன்ச் டிஸ்ப்ளே பேனல் விலை 40 டாலர்கள் வரை இருக்கும். இது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள 6.7 இன்ச் LTPO OLED பேனலின் விலையை விட குறைவு ஆகும். சாம்சங் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கான OLED பேனல்களை வினியோகம் செய்ய இருக்கிறது. எல்ஜி டிஸ்ப்ளே LTPO மாடல்களில் கவனம் செலுத்த இருக்கிறது.

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களிலும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளேக்கள் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் 120Hz LTPO பேனல்கள் வழங்கப்பட உள்ளன. முந்தைய தகவல்களின் படி புதிய ஐபோன் சீரிசில் அனைத்து மாடல்களும் டைனமிக் ஐலேண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் SE 4 மாடலில் புதிய OLED ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய குறைந்த விலை ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: Jon Prosser

Tags:    

Similar News