மொபைல்ஸ்

மேம்பட்ட அம்சங்களுடன் அல்ட்ரா மாடலை உருவாக்கும் ஆப்பிள்!

Published On 2023-02-06 13:57 IST   |   Update On 2023-02-06 13:57:00 IST
  • 2024 ஆண்டு ஆப்பிள் நஇறுவனத்தின் டாப் எண்ட் மாடலாக ஐபோன் 16 அல்ட்ரா இருக்கும் என தகவல்.
  • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-ஐ விட ஐபோன் 16 அல்ட்ரா விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

ஆப்பிள் ஐபோன் சீரிஸ்களில் விலை உயர்ந்த மற்றும் டாப் எண்ட் மாடலாக அதன் "ப்ரோ மேக்ஸ்" வேரியண்ட் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ப்ரோ மேக்ஸ் வேரியண்டை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் டாப் எண்ட் மாடல் ஐபோன் 16 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.புதிய ஐபோன் 16 அல்ட்ரா ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் என இருவித மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

புதிய ஐபோன் அல்ட்ரா மாடலில் மேம்பட்டகேமரா, அதிவேக சிப்செட், சற்றே பெரிய டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் சில எதிர்கால அம்சங்கள், அதாவது சார்ஜிங் போர்ட் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களை ப்ரோ வேரியண்ட்களில் இருந்து வித்தியாசப்படுத்த ஆப்பிள் நிறுவனம் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இவை வாடிக்கையாளர்கள் செலுத்தும் அதிக தொகைக்கு ஈடு செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே டாப் எண்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ஆப்பிள் அல்ட்ரா பெயரை பயன்படுத்த துவங்கி விட்டது.

மக்கள் சிறந்த போனை வாங்க அதிக தொகை செலுத்த தயாராக உள்ளனர் என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வருவாய் விளக்க கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய ஐபோன் மாடல் ஆப்பிள் ஐபோன் மூலம் ஈட்டும் வருவாயை மேலும் அதிகப்படுத்த உதவும். 

Tags:    

Similar News