மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன ஐபோன் 14 ப்ரோ வீடியோ

Published On 2022-09-05 09:39 IST   |   Update On 2022-09-05 09:39:00 IST
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
  • புது ஐபோன் 14 ப்ரோ மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக முன்புற டிஸ்ப்ளேவில் மாத்திரை வடிவ கட்-அவுட் வழங்கப்படுகிறது. இதில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி பொருத்தப்படுகிறது. இதே டிசைனை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான ரெண்டர் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் புது ஐபோனில் உள்ள இரு பன்ச் ஹோல்கள் இடையில் உள்ள இடைவெளியை பயனர்கள் எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள மாத்திரை வடிவ கட்-அவுட் செல்பி கேமராவுடன் இணைந்து ஒற்றை கட்-அவுட் போன்று மாறுகிறது. இது மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.


நாட்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆப்பிள் தனது பயனர்களுக்கு பிரைவசி நோட்டிபிகேஷன்களை வழங்க முடியும் என்பதால் இந்த அம்சம் பயனுள்ளதாகவே தெரிகிறது. தற்போதைய வீடியோவில் இருப்பது உண்மையில் ஐபோன் 14 ப்ரோ தானா அல்லது ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டுக்கு பின் வெளியாகும் மாக் ஐபோன் மாடலா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வீடியோவில் உள்ள யுஐ வழக்கமான ஐஒஎஸ்-ஐ விட வித்தியாசமாகவே இருக்கிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் "பார் அவுட்" நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ்/மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஐபோன் சீரிஸ் மூலம் ஆப்பிள் தனது மினி சீரிஸ் மாடல்களை நிறுத்துகிறது. இதுதவிர புது ஐபோன் சீரிசின் ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட இருக்கிறது.

ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மேம்பட்ட ஏ16 பயோனிக் பிராசஸர்கள் வழங்கப்பட உள்ளன. ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ப்ரோ மாடல்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Image Credit: 9to5Mac

Tags:    

Similar News