மொபைல்ஸ்

இந்திய வலைதளத்தில் லீக் ஆன ஆப்பிள் ஐபோன் 14

Published On 2022-08-24 09:40 IST   |   Update On 2022-08-24 09:40:00 IST
  • ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய ஐபோன் 14 மாடல்கள் மேம்பட்ட சிறப்பம்சங்கள், ஹார்டுவேர் உடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வென்னிலா ஐபோன் 14 மாடல் பிஐஎஸ் இந்தியா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இது பற்றிய தகவல்களில் ஐபோன் 14 ஸ்மார்ட்போன் A2882 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. இத்துடன் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இறுக்கிறது. ஸ்டாண்டர்டு ஐபோன் 14 மாடல் ஐபோன் 13 போன்ற தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 12MP டூயல் கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிநவீன ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம். 

Tags:    

Similar News