மொபைல்ஸ்

ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2023-02-22 08:39 GMT   |   Update On 2023-02-22 08:39 GMT
  • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 7 மாடல் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஸ்மார்ட் 7 மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 மாடலில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், யுனிசாக் SC9863A பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை கூடுதல் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி, 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் பேட்டன் டிசைன், சில்வர் ஐயன் ஸ்பிரே, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இன்ஃபின்க்ஸ் ஸ்மார்ட் 7 அம்சங்கள்:

6.6 இன்ச் 1612x720 பிக்சல் HD+ ரெசல்யூஷன்

ஆக்டா கோர் யுனிசாக் SC9863A1 பிராசஸர்

IMG8322 GPU

4 ஜிபி LPDD4X ரேம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட்

13MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஷ்

5MP செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

பின்புறம் கைரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2

யுஎஸ்பி டைப் சி

6000 எம்ஏஹெச் பேட்டரி

10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 ஸ்மார்ட்போன் அஸ்யூர் புளூ, எமரால்டு கிரீன் மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 7 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Tags:    

Similar News