மொபைல்ஸ்

பழைய ஐபோன் விலையை திடீரென உயர்த்திய ஆப்பிள்

Published On 2022-09-10 09:41 IST   |   Update On 2022-09-10 09:41:00 IST
  • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பழைய ஐபோன் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
  • சமீபத்தில் தான் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 2022 மாடலை அறிமுகம் செய்தது. இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் 2022 ஐபோன் SE விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஐபோன் SE 2022 மாடல் விலையை ஆப்பிள் திடீரென உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கான காரணம் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


எனினும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றமே காரணமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி வினியோகம் வரை பல்வேறு கட்டணங்கள் மாறி இருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறலாம்.

விலை உயர்வுக்கு முன் இந்திய சந்தையில் ஐபோன் ஐபோன் SE 2022 (64, 128 மற்றும் 256 ஜிபி) மாடல்கள் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 48 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 58 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

புதிய விலை விவரம்:

ஐபோன் SE 2022 (64 ஜிபி) ரூ. 49 ஆயிரத்து 990

ஐபோன் SE 2022 (128 ஜிபி) ரூ. 54 ஆயிரத்து 900

ஐபோன் SE 2022 (256 ஜிபி) ரூ. 64 ஆயிரத்து 900

Tags:    

Similar News