மொபைல்ஸ்

ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி - ப்ளிப்கார்ட் சலுகையுடன் விற்பனைக்கு வந்தது ஐபோன் 14 Yellow வேரியண்ட்!

Update: 2023-03-15 04:26 GMT
  • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை எல்லோ நிறத்தில் அறிமுகம் செய்தது.
  • புதிய ஐபோன் 14, 14 பிளஸ் மாடல்களின் எல்லோ நிற வேரியண்ட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14, ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய எல்லோ நிற வேரியண்ட் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய எல்லோ நிற ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதன் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் 256 ஜபி ஐபோன் 14 விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் ஐபோன் 14 (512 ஜிபி) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் 128 ஜிபி மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 256 ஜிபி ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே மாடல்களின் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் முறையே ரூ. 82 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 91 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் இரு மாடல்களின் 512 ஜிபி விலை குறிப்பிடப்படவில்லை. எல்லோ நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கலின் விலை அதன் மற்ற நிற வேரியண்ட்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 57 ஆயிரத்து 800 வரை தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் இரு மாடல்களுக்கும் அதிகபட்சம் 8 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 20 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரல் கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News