கணினி

அசத்தல் அம்சங்களுடன் சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகமானது

Published On 2022-07-04 13:28 GMT   |   Update On 2022-07-04 13:28 GMT
  • இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் என உடல் நலன் சார்ந்த அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சியோமி பேண்ட் 7 மாடல் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலக சந்தைகளில் விற்பனைக்கு வந்த இந்த பேண்ட் இன்னும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதற்குள் அந்நிறுவனம் அதன் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தி விட்டது. அதன்படி சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடல் இன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Mi பேண்ட் 7 மாடலில் உள்ள அம்சங்கள் இதிலும் இடம்பெற்று உள்ளது. ஆனால் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. சியோமி பேண்ட் 7 மாடலில் 1.61 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.


ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருந்தன. இந்த அம்சங்கள் சியோமி பேண்ட் 7 ப்ரோ மாடலிலும் இடம்பெற்று உள்ளது.

மேலும் இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் உடன் இந்த சியோமி பேண்ட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பேண்ட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News