கணினி

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அசத்திய சியோமி.. இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

Published On 2023-04-07 07:13 GMT   |   Update On 2023-04-07 07:13 GMT
  • இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
  • இந்தியா பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் சோனி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கடந்த ஆண்டில் மட்டும் 28 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டு வாக்கில் பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டதே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என ஆய்வு நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர குறைந்த விலையில் கிடைக்கும் பெரிய அளவிலான டிவி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பும் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும். டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் பண்டிகை கால விற்பனைக்கு பின் ஸ்மார்ட் டிவி விற்பனை வருடாந்திர அடிப்படையில் இரண்டு சதவீதமாக இருந்தது. 2022 ஆண்டு ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்துள்ளது. ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

 

சியோமியை தொடர்ந்து சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் போன்ற பிராண்டுகள் வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அடுத்தத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டில் ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் பிராண்டுகள் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதவிர சோனி நிறுவனம் பிரீமியம் பிரிவில் பலரும் தேர்வு செய்யும் பிராண்டாக உள்ளது.

2022 ஆண்டில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 99 சதவீத யூனிட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சில பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் டிவி மாடல்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் 96 சதவீதம் எல்இடி டிவிக்கள் ஆகும், இவற்றில் பெரும்பாலும் மீடியாடெக் சிப்செட்களே வழங்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் சியோமி, சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் மற்றும் டிசிஎல் உள்ளிட்டவை ஸ்மார்ட் டிவி சந்தையில் 42.6 சதவீத பங்குகளை பெற்றுள்ளன.

Tags:    

Similar News