கணினி

84 வாட் ஸ்பீக்கர் கொண்ட 4K எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-11-23 06:14 GMT
  • வு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட் டிவியில் இன்பில்ட் 84 வாட் ஸ்பீக்கர், டிஜெ கிலாஸ் சப்வூஃபர் உள்ளது.

வு நிறுவனம் GloLED 43 இன்ச் 4K டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் வு GloLED 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய 43 இன்ச் 4K டிவி-யில் 84 வாட் சவுண்ட் அவுட்-புட், இன்-பில்ட் டிஜெ கிலாஸ் சப்வூஃபர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-யின் வால்யூம் 100-இல் வைக்கப்பட்டாலும் டிவி வைப்ரேட் அல்லது கிராக் ஆகாது என வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள Glo பேனல் மற்றும் Glo A.I. பிராசஸர் பிரைட்னஸ் அளவை 60 சதவீதம் அதிகரித்து, மின் பயன்பாட்டை குறைக்கும்.

வு Glo AI பிராசஸர் OTT தரவுகளை மேம்பட்ட AI தொழில்நுட்பத்தில் அப்-ஸ்கேல் செய்து ஃபுல் கலர் கமுட் வழங்குகிறது. மேலும் மேம்பட்ட கிரிகெட் மோட் 100 சதவீதம் பால் விசிபிலிட்டி மற்றும் லைவ் ஸ்டேடியம் எக்ஸ்பீரியன்ஸ், டால்பி அட்மோஸ் விர்ச்சுவலைசேஷன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஃபிரேம்லெஸ் டிசைன் கொண்டிருக்கும் வு GloLED டிவி வியூவிங் ஏரியாவை அதிகப்படுத்துகிறது. இதில் உள்ள டிஜெ சப்வூஃபர் டிவி-யின் ஃபிரேமிற்குள் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வு GloLED டிவி அம்சங்கள்:

43 இன்ச் 3840x2160 பிக்சல் 4K LED டிஸ்ப்ளே

குவாட் கோர் பிராசஸர்

டூயல் கோர் GPU

2 ஜிபி ரேம்

16 ஜிபி மெமரி

கூகுள் டிவி

OTT ஹாட்கீ கொண்ட ரிமோட்

வை-ஃபை, ப்ளூடூத் 5.0

84 வாட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள்

டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ் விர்ச்சுவலைசேஷன்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய வு GloLED 43 இன்ச் 4K டிவி விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News