கணினி

உலக கோப்பை கால்பந்து தொடர் எதிரொலி - புது சலுகைகளை அறிவித்த வோடபோன் ஐடியா!

Update: 2022-11-25 05:09 GMT
  • வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய IR ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • புது சலுகைகள் உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக நான்கு சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரை காண செல்லும் வாடிக்கைாயளர்களுக்காக புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சர்வதேச ரோமிங் சலுகைகளின் கீழ், ஏழு நாட்கள் துவங்கி அதிகபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

அதன்படி வோடபோன் ஐடியா ரூ. 2 ஆயிரத்து 999 விலை சர்வதேச ரோமிங் சலுகையில் 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகறது. இத்துடன் அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ. 35 கட்டணத்திலும், 25 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 3 ஆயிரத்து 999 சலுகையில் 3 ஜிபி டேட்டா, 300 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கு அவுட்கோயிங் அழைப்புகள், இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த லுகையிலும் அழைப்புகள் நொடிக்கு ரூ. 35, 50 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை பத்து நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ. 4 ஆயிரத்து 499 விலை கொண்ட வோடபோன் ஐடியா சலுகையில் 5 ஜிபி டேட்டா, 500 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான அவுட்கோயிங் அழைப்புகள் மற்றும் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதில் அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ. 35, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 5 ஆயிரத்து 999 சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான அவுட்கோயிங் அழைப்புகள் மற்றும் இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதிலும் நொடிக்கு ரூ. 35 விலையில் அவுட்கோயிங் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கால்பந்து உலக கோப்பை தொடருக்காக இதே போன்ற ரோமிங் சலுகைகளை அறிவித்து இருந்தது.

Tags:    

Similar News