கணினி

காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவித்த வி

Published On 2023-02-11 09:03 GMT   |   Update On 2023-02-11 09:03 GMT
  • காதலர் தினத்தை ஒட்டி பிரீபெயிட் ரிசார்ஜ்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வி காதலர் தினத்தை ஒட்டி இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. பல்வேறு ரிசார்ஜ் சலுகைகளில் வி நிறுவனம் அதிகபட்சம் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. புதிய சலுகைகள் வி ஆப் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி "Vi Love Tunes Contest" பெயரில் பரிசு திட்டம் அறிவித்து இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது.

ரூ. 299 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ் சலுகைகளில் அதிகபட்சம் 5 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டாவை எவ்வித தயக்கமும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வி ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான ரிசார்ஜ்களை செய்வோருக்கு அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதற்கான வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும். அனைத்து சலுகைகளிலும் கூடுதல் டேட்டா பெறுவதற்கு பயனர்கள் இந்த சலுகைகளை வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இவை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

பரிசு கூப்பன் விவரங்கள்:

காதலர் தினத்தை ஒட்டி வி அறிவித்து இருக்கும் "Vi Love Tunes Contest"-இல் கலந்து கொண்டு பயனர்கள் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பனை வெல்ல முடியும். சமூக வலைதளங்களில் நடைபெறும் #ViLoveTunes போட்டிகளில் வி பயனர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் பயனர்கள் ஹங்காமா மியூசிக் காதலர் தின பிளேலிஸ்ட்-இல் மாற்றப்பட்ட வரிகள் கொண்ட பாடல்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்வோர் சரியான விடையை #ViLoveTunes எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி கமெண்ட் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் கார்ட் ஆக வெற்றி பெற முடியும்.

Tags:    

Similar News