கணினி

ரூ. 1799 விலையில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-08-25 06:01 GMT   |   Update On 2022-08-25 06:01 GMT
  • ட்ரூக் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • சமீபத்தில் தான் 7ஆர்ஜிபி லைட்டிங் கொண்ட ட்ரூக் பிடிஜி ஆல்பா இயர்போன் இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் முன்னணி ஆடியோ நிறுவனங்களில் ஒன்றான ட்ரூக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பட்ஸ் ப்ரோ இயர்போன்களை அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 30 டிபி வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் குவாட் மைக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது அழைப்புகளின் போது 90 சதவீத வெளிப்புற சத்தத்தை தடுக்கிறது.

இத்துடன் 12.4 மில்லிமீட்டர் ஜென்யூன் டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் சினிமா தர மியூசிக் அனுபவத்தை வழங்கும். இதில் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் அல்ட்ரா லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இன்ஸ்டண்ட் பேரிங் தொழில்நுட்பம், அதிவேக இணைப்பு மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்குகிறது.


இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கிறது. இதன் கேசில் டிஜிட்டல் பேட்டரி இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் பத்து நிமிட சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கான கேம்பிளே வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் உடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

ட்ரூக் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் பின் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 1999 என மாறி விடும்.

Tags:    

Similar News