கணினி

ரூ.899 விலையில் கேமிங் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2022-08-01 05:01 GMT   |   Update On 2022-08-01 05:01 GMT
  • ட்ரூக் நிறுவனத்தின் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • அறிமுக சலுகையாக மிக குறைந்த விலையில் புது கேமிங் இயர்பட்ஸ் மாடல் வெளியாகி இருக்கிறது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து இருக்கும் புது இயர்பட்ஸ் மாடல் இந்த பிரிவில் மிகவும் வித்தியாசமான மாடலாக உள்ளது. புது இயர்பட்ஸ் ட்ரூக் BTG ஆல்பா என அழைக்கப்படுகிறது. இது ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் ஆகும்.

சமீபத்தில் தான் ட்ரூக் பட்ஸ் F1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ட்ரூக் BTG ஆல்பா எனும் பெயரில் புதிதாக ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. புது இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


ட்ரூக் BTG ஆல்பா அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ட்ரூக் BTG ஆல்பா மாடலில் அல்ட்ரா லோ லேடன்சி வசதி உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 40ms ரெஸ்பான்ஸ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள இன்ஸடண்ட் பேரிங் அம்சம் கொண்டு அதிவேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்த முடியும்.

இத்துடன் டூயல் மைக்ரோபோன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். பேட்டரி பேக்கப்-ஐ பொருத்த வரை ட்ரூக் BTG ஆல்பா கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 300 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ்-ஐ 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ட்ரூக் BTG ஆல்பா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 1,299 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News