கணினி

வேற லெவல் அம்சங்களுடன் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த சோனி

Update: 2022-11-21 10:03 GMT
  • சோனி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • புதிய சோனி இயர்பட்ஸ் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் எனும் வசதியை கொண்டிருக்கிறது.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல் சோனி நிறுவனத்தின் சிறிய மற்றும் எடை குறைந்த மாடல் ஆகும். இந்த இயர்பட்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களால் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது.

இந்த இயர்பட்ஸ் எடை ஒவ்வொன்றும் 4.8 கிராம் கொண்டுள்ளன. அந்த வகையில், சோனி நிறுவனத்தின் எடை குறைந்த மற்றும் அளவில் சிறிய நாய்ஸ் கேன்சலிங் மாடல் ஆகும். இதில் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சோனி S WF-lS900N மாடலில் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளது. இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட் உள்ளிட்வைகளை நீக்குகிறது.

புதிய சோனி இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. ANC மோட் ஆன் செய்யப்பட்ட நிலையில், இந்த இயர்பட்ஸ் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேக்கப் 14 மணி நேரமாக அதிகரிக்கும். இதில் குயிக் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

இதன் சார்ஜிங் கேஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரமே ஆகும். இந்த இயர்பட்ஸ்-இல் உள்ள "நாய்ஸ் ஆஃப்" வசதி ANC மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட்களிடையே தானாக ஸ்விட்ச் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இதுதவிர ப்ளூடூத் 5.2, கூகுளின் ஃபாஸ்ட் பேரிங் அம்சம், இண்டகிரேட் செய்யப்பட்ட வி1 பிராசஸர் உள்ளது. இது மேம்பட்ட நாய்ஸ் கேன்சலிங் மற்றும் ஆடியோ தரத்தை வெளிப்படுத்த செய்கிறது.

இந்திய சந்தையில் புதிய சோனி S WF-lS900N இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை நவம்பர் 21 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சோனி லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல்- பிளாக், வைட் மற்றும் பெய்க் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News