கணினி

ரூ. 11 ஆயிரம் விலையில் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த ரெட்மி

Update: 2023-03-14 09:01 GMT
  • ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 கொண்டிருக்கிறது.
  • இதில் ஃபயர் டிவி ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களை வழங்குகிறது.

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்ட தனது முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. அமேசான் ஃபயர் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி அமேசான் ஃபயர் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதனுடன் அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் கொண்ட ரிமோட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் குரல் மூலமாகவே டிவியை இயக்கலாம்.

புதிய ஸ்மார்ட் டிவியில் 32 இன்ச் HD ரெடி டில்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின் தொழில்நுட்பம், 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, DTS-HD மற்றும் DTS: விர்ச்சுவல் X தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அமேசான் ஃபயர் ஒஎஸ் 7 ஃபயர் டிவி ஆப் மூலம் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிக ஆப்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகிறது.

 

இவை தவிர பிரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ், யூடியூப் போன்ற முன்னணி தளங்களும் இந்த டிவியில் இயங்குகின்றன. அமேசான் மினிடிவியை ஸ்டிரீம் செய்வதோடு, 70-க்கும் அதிக லைவ் சேனல்களை கண்டுகளிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் அம்சங்கள்:

32 இன்ச் 1366x768 பிக்சல் HD ரெடி டிஸ்ப்ளே

விவிட் பிக்ச்சர் என்ஜின், ஆட்டோ லோ லேடன்சி மோட்

1.5GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A35 பிராசஸர்

மாலி G31 MP2 GPU

1 ஜிபி ரேம்

8 ஜிபி மெமரி

ஃபயர் ஒஎஸ்

ரெட்மி வாய்ஸ் ரிமோட்

வைபை, 2x யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக்

2x10 வாட் ஸ்பீக்கர்கள்

டால்பி ஆடியோ, DTS-HD, DTS விர்ச்சுவல் X

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 இன்ச் மாடலின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 11 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி டிவி விற்பனை மார்ச் 21 ஆம் தேதி துவங்குகிறது. 

Tags:    

Similar News