கணினி

விரைவில் இந்தியா வரும் ரெட்மி பேட் - அசத்தல் டீசர் வெளியிட்ட சியோமி

Update: 2022-09-30 05:06 GMT
  • சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி பேட் டேப்லெட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
  • புதிய ரெட்மி பேட் டேப்லெட் மொத்தத்தில் மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

சியோமி நிறுவனம் ரெட்மி பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ரெட்மி பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்து இருக்கிறது. மேலும் இதற்கான டீசரில் ரெட்மி பேட் மாடல் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

எனினும், கிரீன் மட்டுமின்றி கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி பேட் மாடல் 10.6 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் டெப்த், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, முன்புற கேமரா ஃபோக்கஸ்ஃபிரேம் தொழில்நுட்பத்துடன் வரும் என்றும் இது 105 டிகிரியில் ஃபீல்டு ஆப் வியூ வழங்கும் என தெரிகிறது. ரெட்மி பேட் மாடல் நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை ரெட்மி பேட் மாடல் 8000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ரெட்மி பேட் இந்திய விலை விவரங்கள் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அறிமுக நிகழ்வில் தெரியவரும். வரும் நாட்களில் இந்த டேப்லெட் பற்றிய கூடுதல் விவரங்களை சியோமி டீசர்கள் வடிவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News