கணினி

ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் ரியல்மி

Update: 2022-08-09 05:02 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.

ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டை உணர்த்தும் டீசர்களின் படி, இந்த மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என தெரியவந்துள்ளது.

பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்வாட்ச் மாடல் என்ற வகையில், இதில் பெரிய AMOLED டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம். முந்தைய வாட்ச் 2 ப்ரோ மாடலில் எல்சிடி ஸ்கிரீன் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் ரியல்மி வாட்ச் 2 ப்ரோ விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விற்பனை ரியல்மி மட்டுமின்றி ப்ளிப்கார்ட் வலைதளத்திலும் நடைபெற இருக்கிறது.

வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டு தேதியை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 5ஜி வெளியாகும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News