கணினி

ENC வசதியுடன் ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் அறிமுகம்

Update: 2022-08-18 09:57 GMT
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டெக்லைப் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த இயர்பட்ஸ் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனுடன் இந்த புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது டெக்லைப் இயர்பட்ஸ் எர்கோனோமிக் டிசைன், டூயல் டோன் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய டெக்லைப் பட்ஸ் T100 மாடலில் ஏர்பாட்ஸ்-இல் இருப்பதை போன்ற ஸ்டெம் டிசைன் மற்றும் டைட்டானியம் பிளேட் செய்யப்பட்ட டையகிராம் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 2500UIC சிப் கொண்டுள்ளது.


புதிய ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, குறைந்த எடையில் எர்கோனோமிக் டிசைன், கேமிங்கின் போது 88 மில்லி செகண்ட்ஸ் லேடன்சி ரேட் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யும் கண்ட்ரோல், போன்ற ஆப்ஷன்களுக்கு டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பாப் வைட் மற்றும் பன்க் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News