கணினி

சோனி PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர் இந்திய முன்பதிவு துவக்கம்

Published On 2022-11-22 05:07 GMT   |   Update On 2022-11-22 05:07 GMT
  • சோனி நிறுவனத்தின் புதிய தலைமுறை கேமிங் கன்சோல் PS5 உலக சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
  • புதிய கேமிங் கன்சோல் துவங்கி அதில் பயன்படுத்த ஏராளமான புது சாதனங்களை சோனி தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

சோனி நிறுவனத்தின் PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் வயர்லெஸ் கண்ட்ரோலர் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. அல்ட்ரா கஸ்டமைசேஷன் வசதியுன் பிளேஸ்டேஷன் கேம்பேட்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்தியாவிலும் இதே தேதியில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதிய கண்ட்ரோலருக்கான முன்பதிவு அமேசான் இந்தியா, e2z ஸ்டோர், கேம்ஸ்திஷாப் மற்றும் சோனி செண்டர் உள்ளிட்டவைகளில் நடைபெறுகிறது. புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர் விலை ரூ. 18 ஆயிரத்து 990 ஆகும். அமெரிக்க சந்தையில் இதன் விலை 199.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அக்டோபர் 25 ஆம் தேதி இதன் முன்பதிவு துவங்கியது.

எக்ஸ்பாக்ஸ் எலைட் சீரிஸ் கண்ட்ரோலர்களுக்கு சோனி தரும் பதிலடியாக புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்கள் பார்க்கப்படுகின்றன. சோனி நிறுவனம் கஸ்டமைஸ் செய்யக்கூடிய கண்ட்ரோலர்களை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இதுபோன்ற வசதியை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்கஃப் கேமிங் போன்ற மூன்றாம் தரப்பு ஸ்டோர்களை நாட வேண்டிய அவசியம் இருந்து வந்தது.

தற்போது புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்களின் முன்பதிவை துவங்கி, விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி துவங்க உள்ளன. இந்த தேதியில் சர்வதேச சந்தையில் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எப்போது விற்பனை துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் மாற்றக்கூடிய ஸ்டிக் மாட்யுலின் முன்பதிவு இந்தியாவில் துவங்க இருப்பதாக சோனி அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றி எந்த தகவலும் இல்லை. 

Tags:    

Similar News