கணினி

ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்த பெபில்

Published On 2023-02-21 05:03 GMT   |   Update On 2023-02-21 05:03 GMT
  • பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்தது.
  • புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் சுழலும் கிரவுன், வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.

பெபில் நிறுவனம் இந்தியாவில்- பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் என இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் வட்ட வடிவம் கொண்ட டயல், பிரீமியம் மெட்டாலிக் கேசிங், சுழலும் கிரவுன் உள்ளது. பெபில் விஷன் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டல் அலாய் கேசிங், சுழலும் கிரவுன் மற்றும் வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.

இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் இன்பில்ட் ஸ்பீக்கர் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, குயிக் கீபேட் ஷாட்கட்கள், ரிசெண்ட் லாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் உள்ள வட்ட வடிவம் கொண்ட டயல் 1.43 இன்ச் அளவில் ஆல்வேஸ் ஆன் AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. பெபில் விஷன் மாடலில் 2.05 இன்ச் HD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

 

புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர் என மேம்பட்ட ஹெல்த் மாணிட்டரிங் அம்சங்கள் மற்றும் பெபில் ஜென் மோட் உள்ளது. இத்துடன் மல்டி-ஸ்போர்ட்ஸ் மோட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட், அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் அம்சங்கள்:

ஸ்பெக்ட்ரா ப்ரோ: 1.43 இன்ச் AMOLED வட்ட வடிவ டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

ஸ்பெக்ட்ரா விஷன்: 2.05 இன்ச் HD LCD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

ஹெல்த் மாணிட்டரிங்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

இன்பில்ட் கேம்ஸ், கேலண்டர், ஸ்மார்ட் கால்குலேட்டர்

டார்ச், ஸ்டாப்வாட்ச், ரைஸ் டு வேக், போன் டயல்

மியூசிக், வானிலை, காண்டாக்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடல் மிட்நைட் கோல்டு, ஈவ்னிங் கிரே, ஜெட் பிளாக் மற்றும் மூன்லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. பெபில் விஷன் மாடல் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஈவ்னிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

புதிய பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்றும் பெபில் விஷன் மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விற்பனை பெபில் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News