கணினி

ஏகப்பட்ட அப்டேட்களுடன் கலர்ஓஎஸ் 13-ஐ அறிவித்த ஒப்போ

Published On 2022-08-19 10:56 IST   |   Update On 2022-08-19 10:56:00 IST
  • ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கலர்ஓஎஸ் 13 ஆண்ட்ராய்டு 13-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • புது கலர்ஓஎஸ் 13 அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்ட கலர்ஓஎஸ் 13-ஐ தனது ஸ்மார்ட்போன்களுக்காக அறிவித்து இருக்கிறது. கலரோஒஎஸ் 13 மற்றும் ஆக்சிஜன்ஒஎஸ் 13 ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. எனினும், இரு ஒஎஸ்களின் அம்சங்களில் எந்த அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

தண்ணீரின் திரவத் தன்மையை சார்ந்து கலர்ஒஎஸ் 13 டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய அக்வாமார்பிக் டிசைன் உள்ளது. ஆக்சிஜன்ஒஎஸ் 13 தண்ணீர் மற்றும் இயற்கை சார்ந்து டிசைன் செய்யப்பட்டு இருந்தது. புதிய தீம் நிறங்கள் கடற்பரப்பில் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது ஏற்படும் நிற மாற்றங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளன. கலர்ஒஎஸ் 13-இல் கார்டு ஸ்டைல் லே-அவுட் உள்ளது.


இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி உள்ளது. இதற்காக ஹோம்லேண்ட் பெயரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனிமேஷன்கள் வெப்பநிலையை பொருத்து தானாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்க ஏதுவாக டைனமிக் கம்ப்யுடிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒரே ஆண்டில் ஒப்போ நிறுவனத்தின் 33 ஸ்மார்ட்போன்களுக்கு கலர்ஒஎஸ் 13-ஐ முதற்கட்டமாக வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் 60 நாடுகளில் சுமார் 160 மில்லியன் பயனர்கள் புது ஒஎஸ்-ஐ பயன்படுத்த முடியும். கலர்ஒஎஸ் வரலாற்றில் இது மிகப் பெரிய அப்டேட் திட்டம் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. 2023 வாக்கில் 20-க்கும் அதிக சாதனங்களில் கலர்ஒஎஸ் 13 வழங்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News