கணினி

105 ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-10-03 09:42 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய நார்டு வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதி கொண்ட வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் நார்டு சீரிசில் முதல் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நார்டு வாட்ச் மாடலில் 1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதியுடன் 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் கேஸ் சின்க் அலாய் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வலதுபுறம் ஒரு பட்டன் மற்றும் சிலிகான் ஸ்டிராப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இது 105-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இதில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா, கிரிகெட் உள்பட பல்வேறு விளையாட்டுகள் அடங்கும்.

ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள்:

1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட்

SF32LB555V406 பிராசஸர்

ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஒஎஸ் 11 மற்றும் அதன் பின் வெளியான ஒஎஸ் சப்போர்ட்

ப்ளூடூத் 5.2 LE

105-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள்

வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68

3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் சென்சார்

மியூசிக் கண்ட்ரோல்கள்

52.4 கிராம் எடை

230 எம்ஏஹெச் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் டீப் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் மட்டுமே பொருந்தும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் தளத்தில் நார்டு வாட்ச் வாங்கும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம்.

Tags:    

Similar News