கணினி

ஜூலை 12-ந் தேதி ஸ்மார்ட்போன் மட்டுமல்ல... இந்த கேஜெட்டையும் சர்ப்ரைஸாக வெளியிட நத்திங் நிறுவனம் திட்டம்

Update: 2022-07-02 09:56 GMT
  • நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கி உள்ளது.

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் என கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அந்நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அதன் புதிய இயர் பட்ஸையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இயர்பட்ஸின் தோற்றம் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளது. அந்த இயர் பட்ஸுக்கு நத்திங் இயர் (1) ஸ்டிக் என பெயரிடப்பட்டுள்ளது.


வழக்கமாக இயர் பட்ஸின் கேஸ் சதுரமாக இருக்கும், ஆனால் நத்திங் நிறுவன இயர் பட்ஸின் கேஸ் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த கேஸ் டிரான்ஸ்பரெண்டாகவும் உள்ளது. வருகிற ஜூலை 12-ந் தேதி லான்ச் ஆன பின்னர் தான் இதன் ஒரிஜினல் விலை என்ன என்பது தெரியவரும்.

Tags:    

Similar News