கணினி

ரூ. 1499 விலையில் அறிமுகமான நாய்ஸ் கேமிங் இயர்பட்ஸ்

Update: 2023-01-25 09:06 GMT
  • நாய்ஸ் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் 36 மணி நேர பிளேபேக் வழங்கும் பேட்டரி உள்ளது.
  • இதில் உள்ள குவாட் மைக் ENC என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது.

நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 2 மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புது இயர்பட்ஸ் ஆகும். நீண்ட நேர கேமிங் செய்வோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் புது இயர்பட்ஸ் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது.

நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடலில் க்ரிஸ்டர் க்ளியர் ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் லோ லேடன்சி, 36 மணி நேரத்திற்கான பிளே டைம், குவாட் மைக் மூலம் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங், அழைப்புகள், விர்ச்சுவல் மீடிங் மற்றும் தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆகும்.

ஃபெதர்லைட் கேஸ், யுஎஸ்ப டைப் சி ரக சார்ஜிங், IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் எவ்வித தடையும் இன்றி அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன டிசைன், குவாட் மைக் ENC மற்றும் 36 மணி நேர பேட்டி லைஃப் உள்ளிட்டவை கேமிங் அனுபவத்தை தடையில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

நாய்ஸ் பட்ஸ் காம்பேட் அம்சங்கள்:

இன்-இயர் டிசைன், ஒன் இயர் டச் கண்ட்ரோல்

13mm ஸ்பீக்கர் டிரைவர்

ப்ளூடூத் 5.3, A2DP, HFP, HSP, AVRCP ப்ரோஃபைல் சப்போர்ட்

அல்ட்ரா லோ-லேடன்சி 40ms

குவாட் மைக் ENC

முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப்

சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 37 மணி நேர பேக்கப்

இன்ஸ்டாசார்ஜ், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், சார்ஜிங் இண்டிகேட்டர்

IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

விலை மற்றும் விற்பனை விவரம்:

நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக், கவெர்ட் வைட் மற்றும் ஷேடோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News