கணினி

இந்தியாவில் அறிமுகமான புது ஜியோ சேவை - எதற்கு தெரியுமா?

Update: 2022-08-08 06:00 GMT
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக கேமிங் பிளாட்பார்ம் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த தளம் கேமிங் ப்ரியர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேம்ஸ் சார்பில் ஜியோகேம்ஸ்வாட்ச் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டிரீமிங் வலைதளம் கேமிங் சார்ந்த அனைத்து தளங்களையும் பார்க்க வழி செய்கிறது. இதில் கேம்பிளே, வீடியோ ஆன் டிமாண்ட் உள்ளிட்டவைகளை நேரலையில் பார்க்க முடியும்.


2019 வாக்கில் துவங்கப்பட்ட ஜியோகேம்ஸ் தளம் கேம் வெளியிடுவோர், ஆன்லைன் கேம் டெவலப்பர்கள், போட்டிகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் சேவை வழங்கும் ஒற்றை மென்பொருள் சேவை ஆகும். ஜியோகேம்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது கேம்களை நேரலை செய்வதற்காகவே ஜியோகேம்ஸ்வாட்ச் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தளம் கொண்டு கேமர்கள் அவரவர் பயன்படுத்தும் எந்த விதமான சாதனத்தை கொண்டும் மிக குறைந்த லேடன்சியில் அதிக தரமுள்ள தரவுகளை பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்க முடியும். இதோடு மட்டுமின்றி வீடியோ பார்ப்பவர்களை தொடர்பில் இருக்க செய்ய கருத்து கணிப்பு மற்றும் எமோட்ஸ் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News