கணினி

தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Published On 2022-12-23 10:39 IST   |   Update On 2022-12-23 10:39:00 IST
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  • 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகையின் விலை ரூ. 749 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோ ரூ. 719 சலுகையும் இதே போன்ற பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவை தவிர ரூ. 249 - 23 நாட்கள், ரூ. 299 - 28 நாட்கள், ரூ. 533 - 56 நாட்கள், ரூ. 2 ஆயிரத்து 879 - 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அனைத்திலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

மற்ற சலுகைகளை போன்றே புது சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என ஏராளமான ஜியோ சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. புது சலுகை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகை ரூ. 239 அல்லது அதற்கும் அதிக சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ. 749 விலை சலுகை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செக்பாயிண்ட்களிலும் இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News